Recent Posts

என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே

பாவ இருள் நீங்க மானிடரான  பரம ஒளியே
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த  அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க  மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக  வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக  வந்தவரே

எனது இணையதள வாசகர் அனைவருக்கும்  எனது நத்தார் வாழ்த்துக்கள்  
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Share:
← Newer Post Older Post → Home

Popular Posts

Blog Archive

Search This Blog

Powered by Blogger.

Blog Archive